‘பண்டிகைகள் என்பது சமயம், மதம், மொழி போன்ற தடைகள் இன்றி அனைவரும் பங்கு பெறும் உரிமை அளிப்பது. ஆதியில் தமிழர் பண்டங்களை ஈகை செய்யும் பொருட்டு கொண்டாடியமையால் பண்டிகை ஆயிற்று. தற்போது தொடர்ச்சியாகக் களைகட்டும் பண்டிகைகளுக்கு இந்த நெய் அப்பம் ருசியைச் சேர்ப்பதோடு, நல்லுறவையும் வளர்க்கும்.
**என்ன தேவை?**
பச்சரிசி – அரை கிலோ
வெல்லம் – அரை கிலோ
மஞ்சள் வாழைப்பழம் – 4
தேங்காய் – அரை மூடி (துருவிக்கொள்ளவும்)
ஏலக்காய் – 5 (பொடிக்கவும்)
சுக்கு – சிறிதளவு (பொடிக்கவும்)
நெய் – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
சிறிதளவு நெய்யில் தேங்காய்த் துருவலை வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு இந்த அரிசியுடன் தண்ணீர் சேர்க்காமல் வெல்லம், வாழைப்பழம் ஆகியவற்றை மட்டும் சேர்த்து மையாக அரைத்தெடுக்கவும். இந்தக் கலவையை எட்டு மணி நேரம் வரை புளிக்கவிடவும். பின்னர் இதனுடன் நெய்யில் வதக்கிய தேங்காய்த் துருவல், பொடித்த ஏலக்காய், பொடித்த சுக்கு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பணியாரச் சட்டியில் நெய் தடவி மாவைப் பணியாரங்களாகச் சுட்டெடுக்கவும்.
�,