+கோயில்களில் மட்டுமல்ல, வீடுகளிலும் புரட்டாசி விரத வழிபாடு முதன்மையாக இருக்கும். புரட்டாசி மாதம் முழுவதுமே சிலர் அசைவத்தை விலக்குவர். இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருப்பர். புரட்டாசி விரதம் இருப்பவர்கள் ஒருபொழுது மட்டுமே உணவு எடுத்துக்கொள்வர். அப்படிப்பட்டவர்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்றது, இந்த எள்ளு சாதம்.
**என்ன தேவை?**
வேகவைத்த உதிரியான சாதம் – அரை கப்
வெள்ளை எள் – 4 டேபிள்ஸ்பூன் (வறுத்தது)
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்தும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்துச் சிவக்க வறுத்து ஆறவிடவும். இத்துடன் எள்ளு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் வடித்த உதிரியான சாதம், பொடித்த எள், உப்பு சேர்த்து உடைந்துவிடாமல் மெதுவாகக் கிளறவும். பிறகு, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளித்து சாதத்தில் சேர்த்து கிளறிப் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: மணத்தக்காளி சாதம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/09/24/2/Food-for-today)�,