rகாஷ்மீர்: தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கைது!

Published On:

| By Balaji

நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியை, இன்று (ஏப்ரல் 1) டெல்லி சிறப்புப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான நபரின் பெயர் பையஸ் அகமத் லோன் என்று தெரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த இவரது தலைக்கு 2 லட்சம் ரூபாய் பரிசை அறிவித்திருந்தது அம்மாநில அரசு.

2015ஆம் ஆண்டு முதல் பையஸ் அகமத் லோனைத் தேடி வருகின்றனர் ஜம்மு காஷ்மீர் போலீசார். அதன்பின்னர் ஜெய்ஷ் இ முகமது தொடர்பான பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த வழக்கில் லோன் தேடப்பட்டு வந்தார். தற்போது அவரது திட்டங்கள், அவரோடு தொடர்பில் இருப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்புப் படை அதிகாரி சஞ்சீவ் யாதவ் பேசுகையில், பையஸ் அகமத் லோனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share