Rகாதல் இளவரசி டயானாவுக்கு சிலை!

public

இங்கிலாந்து இளவரசர் சார்லசை காதல் திருமணம் செய்து கொண்டவர் டயானா. இவர்களுக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சார்லசுடன் வாழ்ந்த போதே தான் வேறொருவரைக் காதலிப்பதாக அறிவித்தார் டயானா.இது இங்கிலாந்து அரச குடும்பத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த அறிவிப்பால், டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபெத் வற்புறுத்தினார்.

இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். உலக அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் முதல் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டார்..அவரது மரணம் குறித்து இன்னும் மர்மம் விலகாத நிலையில், தொடர்ந்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.அரபு நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடியுடன், டயானாவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. டோடியின் பழக்கம் ஏற்பட்ட பின்னர் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சேவைகள், தர்ம அறக்கட்டளைகள் நிறுவுதல் என்று சற்று மாறத் துவங்கிய டயானா மக்கள் சேவை புரிதலேதான் தன் தலையாயக் கடமை என்றார்.அன்பு, மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையில்லா போக்குகள் பற்றி பொதுப்படையாக பேசத் துவங்கினார். இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது செய்தியாளர்களுக்கு பெரும் சுவாரஸ்யத்தை கொடுத்தது. இருவரும் செல்லுமிடமெல்லாம் கேமிராவும், கையுமாக பாபராசி என அழைக்கப்படும் கிசு கிசு பத்திரிகைகாரர்கள் அவர்களைத் துரத்தினார்கள். இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

பாரிஸில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ல் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, பாதுகாப்பாளர் என இருந்தார்கள்.பின்னால் வந்த கார் விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது அதில் பத்திரிகைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த டயானாவின் கார் விபத்துக்குள்ளானது.எவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டதுஃபிரான்ஸின் தடவியல்துறையினருடன், உளவுத்துறையினரும் களத்தில் இறங்கி விபத்து குறித்து நடத்திய புலன் விசாரணையில், ஓட்டுனர் அதிகம் மது அருந்தியிருந்ததாகவும் அதனாலேயே கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் கூறி விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இளவரசி டயானா இறந்து 20 வருடங்கள் ஆன நிலையில், தற்போது அவரது சிலை நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டயானாவின் மகன்களான இளவரசர்கள் ஹரி மற்றும் வில்லியம் ஆகியோர் இந்த செய்தியை தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவரது மகன்கள் கூறுகையில், “எங்களுடைய தாய் பலருடைய இதயங்களை தொட்டுள்ளார். இந்த சிலையானது கென்சிங்டன் மாளிகைக்கு வருபவர்களுக்கு டயானாவின் வாழ்க்கை மற்றும் மரபினை நினைவு கூறும் என்று நம்புகிறோம்” என்றனர்.சிலையை செய்யக்கூடிய சிற்பி யார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. சிலை அமைப்பதற்கான கமிட்டியில் டயானாவின் சகோதரி லேடி சரா மெக்கோயுடேல், நெருங்கிய நண்பர் ஜூலியா சாமுவேல் , அவரது முன்னாள் முதன்மை செயலாளர் ஜேமியி லூத்தர்-பின்கெதான் ஆகியோர் உள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *