பல்வேறு நாடுகளிலும் தகவல் பாதுகாப்பு என்ற ஒரு முக்கியமான ஒன்றிற்காக பயன்பாடுத்திவரும் மொபைல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை ஆப்பிள் நிறுவனத்தின் மாடல்கால் அனைத்தும் மிக உயர்தர விலைகொண்டு வெளியானதால் அதனை கையில் வைத்திருப்பதை ஒரு பெருமைக்குரிய ஒன்றாக கருதினர். அதன் பின்னர் புதிய மாடல்கள் வந்த பின்னர் முந்தய மாடல்கள் குறையவே அதனை பெரும்பாலான நபர்கள் வாங்க முன்வந்தனர். ஆனால் அதிலிருந்து பிற ஸ்மார்ட்போன்களுக்கு தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாது என்றாலும் அதன் மீதுள்ள மோகம் பயனர்களிடம் குறைந்தபாடில்லை. அதிக விலை கொடுத்து ஐ-போன் வாங்க முடியாத பலரும் தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு ஐ-போன் போன்று பின்புற கேஸ்கள் அணிவது, அதன் logo-வை பின்புறம் print செய்து கொள்வது என பல்வேறு செயல்களை செய்து வந்தனர். தற்போது வெளியான புதிய தகவலின் படி புதிய கலரில் ஐ-போன் இனி வெளியாகும் என தெரிவித்துள்ளனர் .
இதுவரை பெரும்பாலும் குறிப்பிட்ட சில கலர்களில் மட்டும் வெளியாகிவந்த இந்த ஐ-போன்கள் இனி சிகப்பு நிறத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவலை தெரிவித்துள்ளனர் ஆப்பிள் நிறுவனத்தினர். வரும் 24(நாளை) இதன் வெளியீடு இருக்கும் எனவும் தகவல் தெரிவித்துள்ளனர் அந்நிறுவனத்தினர்.�,