Rஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

Published On:

| By Balaji

அதிமுவுக்கு ஒற்றைத் தலைமை என்ற ராஜன் செல்லப்பாவின் கோரிக்கை கட்சிக்குள் பரபரப்பான சூழலை உருவாக்கிய நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், செய்தித் தொடர்பாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) காலை 10.30 மணிக்குத் துவங்கியது. கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் முன்பாக அனைவரின் செல்போன்களும் வாங்கி வைத்துக்கொள்ளப்பட்டது.

** சுமார் ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மட்டுமே பேசியிருக்கிறார்கள்.**

**மக்களவைத் தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தல் ஆயத்தப் பணிகள், பொதுக் குழு கூட்டம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. ஏதாவது பிரச்சினை இருந்தால் தலைமையிடம் நேரடியாகக் கூறுங்கள், ஊடகங்களில் பேச வேண்டாம் என்றும் அப்போது வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.**

கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தேர்தல் நிலைப்பாடு, வேட்பாளர் தேர்வு, முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தக் குழு முடிவெடுக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். 12 மணியளவில் கூட்டம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய நால்வரும் தனி அறையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

**கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த ராஜேந்திர பாலாஜியிடம், ராஜன் செல்லப்பா கோபமாக செல்கிறாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கூட்டத்திற்கு சிரித்துக்கொண்டே சென்றோம். சிரித்துக்கொண்டே வெளியே வருகிறோம். கூட்டத்தில் எதுவும் பிரச்சினையில்லை. திருப்திகரமாக பேசினோம். கடந்த தேர்தல் வெற்றி, தோல்விகளைப் பற்றி ஆலோசனை நடத்தினோம். ஒற்றைத் தலைமை குறித்த கருத்தே கூட்டத்தில் எழவில்லை” என்று பதிலளித்தார்.**

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “தேர்தல் தொடர்பாகவும் கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும் விவாதித்தோம். அனைவரும் மகிழ்ச்சியாகவே உள்ளோம். அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வருவதற்கு வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக ஒற்றை தலைமை முடிவு குறித்து பேச வேண்டாம் என்று எடப்பாடி, பன்னீர் இருவரும் முடிவில் இருப்பதாக, நேற்றைய [டிஜிட்டல் திண்ணையில்](https://minnambalam.com/k/2019/06/11/65) குறிப்பிட்டிருந்தோம்.

** 5 தீர்மானம்**

கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து முதல் தீர்மானமும், அதிமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்து இரண்டாவது தீர்மானமும், பிரதமரை முன்மொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து மூன்றாவது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக துவங்கி மக்கள் மனங்களை வென்றெடுப்போம் என்றும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்கள் பணியினைத் தொடர வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

**போஸ்டர் சர்ச்சை**

அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில், இன்று காலை புதிதாக போஸ்டர் ஒன்று முளைத்திருந்தது. ‘அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே…இதுவே அனைத்து தொண்டர்களின் எதிர்பார்ப்பு’ என்று ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவின் 68ஆவது வட்ட உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் ஆறுமுகம் என்பவர் இதனை வைத்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**

[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)

**

**

[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)

**

**

[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)

**

**

[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)

**

**

[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share