வாழும் கலை அமைப்பு சார்பில் யமுனை நதிக்கரையோரம் நடத்தப்பட்ட “உலக கலாசார விழா”வில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு பேசியதாவது, “இந்த நிகழ்ச்சியை நடத்தியதற்காக ரவிசங்கருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அவரது அமைப்பு பலநாடுகளில் பரவியுள்ளது.பல நாடுகளில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளீர்கள். உங்கள் எல்லோரையும் வரவேற்கிறேன். நமது பாரம்பரியம் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும்.நம்மை நாமே குறைபட்டுக்கொண்டால் நம்மை யார் தான் கவனிப்பார்.உலகத்திற்கு அளிப்பதற்கு நம்மிடம் ஏராளமான கருத்துக்கள் இருக்கிறது.பொருளாதாரத்தின் மூலம் மட்டுமல்ல, மனிதர்கள் மீதான மதிப்பு மூலமும் உலகை நாம் இணைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1