உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இத்தொடர் தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பங்கேற்கும் அணிகளின் நிறை குறைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மின்னம்பலத்தில் தொடராகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று, இந்திய அணியின் நீண்டகால விரோதியாக ரசிகர்களால் கருதப்படும் பாகிஸ்தான் அணியின் நிறை குறைகள் குறித்துக் காண்போம்.
**பாகிஸ்தான் அணி**
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகள் எப்போதுமே விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். ஆட்டத்தின் கடைசிப் பந்து வரை எந்த அணி வெற்றி பெறும் என்று கணிக்க முடியாத அளவுக்கு இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடும். அதுவும் உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி தோற்றதே இல்லை என்ற பெயரை இந்தியா தக்கவைக்க வேண்டும் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இரு அணிகளும் கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராகத் தோல்வியுற்றாலும் எதிரெதிரே விளையாடுகையில் விட்டுக்கொடுக்காமல் ஆக்ரோஷமாக விளையாடுவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாகவே இருக்கும்.
**அணியின் பலம்**
தொடக்க நிலை வீரர்களின் நிலையான மற்றும் அதிரடியான ஆட்டமே அந்த அணியின் பலமாகும். ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகிய மூவரும் நிலையாகவும் அதிரடியாகவும் விளையாடி ரன்கள் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக, மூன்றாவது வீரராகக் களமிறங்கும் பாபர் அசாம் அந்த அணியின் மிகப் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து அவர் ஒருவர் மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெளியேற்றியதோடு, இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது அனைவருக்கும் நினைவிருக்கும்.
**பலவீனம்**
சர்பிரஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக் கூட்டணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. முகமது அமீர் பந்துவீச்சிலும் முன்பு இருந்தது போன்ற ஆக்ரோஷம் இல்லை. இது அந்த அணிக்கு மிகப் பெரிய பலவீனமாகும். மேலும், பீல்டிங்கிலும் அந்த அணி மிகவும் மோசமாகச் செயல்பட்டு வருகிறது. எளிய கேட்சுகளைத் தவறவிடுவது, பீல்டிங் சொதப்பல்களால் பவுண்டரிகளை விட்டுக்கொடுப்பது போன்ற தவறுகளைத் திருத்தினால் மட்டுமே அந்த அணியால் உலகக் கோப்பை தொடரில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்ல இயலும்.
பாகிஸ்தான் அணி இதற்கு முன்னர் இம்ரான் கான் தலைமையில் ஒருமுறை (1992) உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பையை வென்று அந்நாட்டின் பிரதமராக இருக்கும் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் வீரர்கள் பரிசளிப்பார்களா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
[உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! – 1](https://minnambalam.com/k/2019/05/23/36)
[உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! – 2](https://minnambalam.com/k/2019/05/24/23)
[உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! – 3](https://minnambalam.com/k/2019/05/25/15)
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!](https://minnambalam.com/k/2019/05/25/81)
**
.
**
[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)
**
.
**
[மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?](https://minnambalam.com/k/2019/05/225/55)
**
.
**
[மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?](https://minnambalam.com/k/2019/05/25/25)
**
.
**
[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)
**
.
.
�,”