உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இத்தொடர் தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பங்கேற்கும் அணிகளின் நிறை குறைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மின்னம்பலத்தில் தொடராகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ’நம்பர் ஒன்’ அணியாகத் திகழும் இங்கிலாந்தின் நிறை குறைகள் குறித்துக் காண்போம்.
**இங்கிலாந்து அணி**
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை குரூப் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிராக மட்டுமே வெற்றிபெற்று பெரும் ஏமாற்றத்தோடு தொடரிலிருந்து வெளியேறியது இங்கிலாந்து அணி. அதன் பின்னர் அந்த அணியின் வளர்ச்சி மிகவும் அபாரமாக இருந்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்த ஆண்டு கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்.
**அணியின் பலம்**
கடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இதுவரையில் அந்த அணி நான்கு முறை 400 ரன்களைக் கடந்துள்ளது. அதிரடியான பேட்டிங் வரிசையே அந்த அணியின் பலமாகும். ஒருநாள் போட்டி வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் குவித்த அணி என்ற பட்டியலில் முதல் இரண்டு இடங்களிலும் இங்கிலாந்து அணிதான் இருக்கிறது. முதல்நிலை வீரர்கள் மட்டுமல்லாமல் அந்த அணியின் பந்துவீச்சாளர்களும் பேட்டிங்கில் சாதிப்பது அந்த அணிக்குக் கூடுதல் பலமாகும்.
நட்சத்திர அதிரடி வீரரும் விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லர் எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜானி பெய்ர்ஸ்டோவ், பென் ஸ்டொக்ஸ், ஜேசன் ராய் உள்ளிட்ட வீரர்களும் அதிரடிக்குப் பெயர் போனவர்கள். ஜோ ரூட்டின் ஆணித்தரமான ஆட்டமும் அந்த அணிக்குப் பலமாகும்.
**பலவீனம்**
சொந்த மண்ணில் விளையாடும்போது இங்கிலாந்து அணி மிகவும் பலம்வாய்ந்ததாக இருக்கும். ஒரு தொடரில் பத்து போட்டிகளில் விளையாடினால் அதில் ஒன்பது போட்டிகளை இங்கிலாந்து வெல்லும் அளவுக்கு சிறப்பாகச் செயல்படும். ஆனால் உலகக் கோப்பை தொடரில் ஒரு அணிக்கு எதிராக ஒருமுறை மட்டுமே விளையாட முடியும் என்பதால் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது வாய்ப்பு இருக்காது. அதாவது ஒரு போட்டியில் தோற்றால்கூட தொடரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சாம்பியன்ஸ் டிராபி தொ
சொந்த மண்ணில் விளையாடுவது பலமாக இருந்தாலும் ஒருபோட்டியில் செய்யும் சிறு தவறுகூட அந்த அணிக்குப் பெருத்த அடியாக இருக்கும். சிறந்த பேட்டிங் வரிசை இருந்தாலும் பந்துவீச்சுக் கூட்டணி அந்த அணிக்கு மிகப் பெரிய அளவில் இல்லை. இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் கோப்பையை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
[உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! – 1](https://minnambalam.com/k/2019/05/23/36)
[உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! – 2](https://minnambalam.com/k/2019/05/24/23)
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[பலித்தது மின்னம்பலம் – மக்கள் மனம் – ஒரு சோறு பதம்!](https://minnambalam.com/k/2019/05/24/31)
**
.
.�,”