உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இத்தொடர் தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பங்கேற்கும் அணிகளின் நிறை குறைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து மின்னம்பலத்தில் தொடராகப் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று, கடந்த உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை நழுவவிட்ட நியூசிலாந்து அணியின் நிறை குறைகள் குறித்துக் காண்போம்.
**நியூசிலாந்து அணி**
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தற்போது தரவரிசையில் நான்காம் இடம் வகிக்கிறது. அந்த அணி அனைத்துப் பிரிவுகளிலும் நீண்டகாலமாகவே சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும் ஐசிசி போட்டிகளில் பெரிய அளவில் வெற்றிகளைக் காணமுடியாமல் தவித்து வருகிறது. இதுவரையில் உலகக் கோப்பையை வெல்லாத அந்த அணி கடந்த முறை இறுதிப் போட்டி வரை சென்று ஏமாற்றத்தோடு திரும்பியது. கடந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட அனைத்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களையும் வென்று சிறப்பாக ஃபார்மில் உள்ளது. இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகள்கூட இவ்வளவு வெற்றிகளைப் பெறவில்லை. இந்த உலகக் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில்கூட பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது.
**அணியின் பலம்**
நியூசிலாந்து அணியின் பலமே (கன்சிஸ்டன்ஸி) நிலைத்தன்மையாகும். ஏற்ற இறக்கங்களின்றி சிறப்பாகச் செயல்பட்டு வரும் அந்த அணி உலகக் கோப்பை தொடரில் அபாயகரமான அணியாகத் திகழ்கிறது. பிரண்டன் மெக்காலம் ஓய்வு பெற்ற பிறகும் கூட எவ்விதப் பின்னடைவும் இல்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் கேன் வில்லியம்சனின் பொறுப்பான மற்றும் நிலையான ஆட்டம் அந்த அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. இந்திய அணியில் விராட் கோலியைப் போல நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் நம்பிக்கை நாயகனாகத் திகழ்கிறார். அவரது விக்கெட் எதிரணிக்கு மிக முக்கியமானதாகும்.
**பலவீனம்**
நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் மற்றும் ரோஸ் டெய்லர் தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் இருவரை மட்டுமே நம்பியிருக்க இயலாது. மார்ட்டின் கப்தில், கோலின் மன்ரோ போன்ற அதிரடி வீரர்கள் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே கைகொடுக்கின்றனர். அந்த அணியின் ஆல்ரவுண்டர்களும் பெரிய அளவில் சோபிக்கத் தவறுகின்றனர். பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், டிம் சவுதி போன்றோர் இருந்தாலும் அவர்களுக்கு மற்ற பந்துவீச்சாளர்கள் பெரிய ஆதரவாக இல்லை.
கடைசி உலகக் கோப்பையை நூலிழையில் தவறவிட்ட நியூசிலாந்து அணி இம்முறை அதைத் தட்டிப்பறிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
[உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! – 1](https://minnambalam.com/k/2019/05/23/36)
[உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! – 2](https://minnambalam.com/k/2019/05/24/23)
[உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! – 3](https://minnambalam.com/k/2019/05/25/15)
[உலகக் கோப்பை: நிலவரமும் எதிர்பார்ப்பும்! – 4](https://minnambalam.com/k/2019/05/26/12)
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.
�,”