rஉலகக் கோப்பை: ஆஸியிடம் வீழ்ந்த பாகிஸ்தான்!

Published On:

| By Balaji

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் 17ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 12) ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச்சும் டேவிட் வார்னரும் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 23ஆவது ஓவரில் பிஞ்ச் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஸ்டீவன் ஸ்மித் 10 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் பொறுப்புடன் ஆடிய வார்னர் சதமடித்தார். 111 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 107 ரன்களுக்கு வார்னர் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணித் தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய முகமது அமீர் 10 ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

308 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு மூன்றாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பக்கர் ஜமான் ரன் ஏதும் எடுக்காமல் பேட் கம்மின்ஸ் வேகத்தில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹம் மட்டும் சிறிது நேரம் தாக்குப் பிடித்து அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறியதோடு சீரான இடைவெளிகளில் தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெளியேறினர்.

பாகிஸ்தான் அணி 45.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சதமடித்து அணியின் ரன் குவிப்புக்கு உதவிய டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 3 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share