�இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சரகம் உத்தரவிட்டது. அதன்படி, அந்தமான் கடல்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக கிழக்கு மண்டல கடலோர காவல்படையில் இருந்து கப்பல்கள் அனுப்பப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி நேற்று சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிழக்கு மண்டல கடலோர காவல்படைத்துறை தலைவர் எம்.ஏ.தல்ஹா கடலோராப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காக கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் தினமும் ரோந்துப் பணியில் ஈடுபட 10 கப்பல்கள், 6 சிறிய படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை மார்ச் 30 ஆம் தேதி அந்தமான் சென்றடையும். இதற்குப் பதிலாக கிழக்கு மண்டலத்துக்கு மாற்றுக்கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும். பயங்கரவாதிகளிடமிருந்து வரும் எந்த ஒரு சவாலையும் சமாளிக்கத் தயாராக உள்ளோம். மிகப்பெரிய கடலோரக் காவல்படையாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகளை அடுத்து, தற்போது இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இதில் 2019 ஆம் ஆண்டு இந்தியா 2வது இடத்துக்கு முன்னேறும்” என்று கூறினார்.�,”