rஆளுநரின் காதல் கடிதம்: குமாரசாமி வருத்தம்!

Published On:

| By Balaji

கர்நாடகத்தில் இன்று 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று முதலமைச்சருக்கு ஆளுநர் அறிவுறுத்தியிருந்த நிலையில் மதியம் 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் மற்றொரு கடிதத்தை அனுப்பினார். அக்கடிதத்தில் அவர், “அவையில் நீங்கள் பெரும்பான்மையை இழந்துவிட்டீர்கள் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். விரிவான விவாதங்கள் அனைத்தும் நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்தவே நடைபெறுவதாக தெரிகின்றன. குதிரை பேர குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில், தாமதமின்றி இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவது அவசியமென்று எனக்கு பல புகார்கள் வந்துள்ளன. ஆகையால், இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி நீங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் கடிதம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, “ஆளுநரிடமிருந்து அரசுக்கு வந்திருக்கும் இரண்டாவது காதல் கடிதம் இதுதான். எனக்கு பதவி மீது பற்று இல்லை. அரசை காப்பாற்ற வேண்டுமென நான் விரும்பினேன். சதித்திட்டங்கள் குறித்து பலரும் எனக்கு எச்சரித்து அமெரிக்கா செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தினர். ஆளுநர் மீது எனக்கு மரியாதையுண்டு. ஆனால் அவரின் இரண்டாம் காதல் கடிதம்தான் எனக்கு வருத்தமளிக்கிறது. குதிரை பேரம் குறித்து 10 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு தெரியுமா?

அவையில் இன்னும் 25-26 எம்.எல்.ஏக்கள் பேச வேண்டியிருக்கிறது. அவர்கள் அவைக்கு வர சபாநாயகர் இன்னும் கால அவகாசம் அளிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகரே முடிவெடுக்கட்டும். டெல்லியால் எனக்கு உத்தரவிட முடியாது. ஆளுநர் அனுப்பிய கடிதத்திலிருந்து மட்டும் என்னை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, ஆளுநரின் கடிதத்தை எதிர்த்து குமாரசாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி காலக்கெடு விதிக்கும் ஆளுநரின் கடிதங்களை எதிர்த்து அவர் முறையிட்டுள்ளார்.

பின்னர் அவையில் குமாரசாமி பேசுகையில், “திங்களன்று (ஜூலை 22) நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என கருதுகிறேன். பல எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு செல்ல விரும்புகின்றனர்” என்று தெரிவித்தார். அதற்கு சபாநாயகர், “நிச்சயமாக திங்களன்று வைத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டார். பதிலளித்த குமாரசாமி, “திங்களன்று முடித்துவிடலாம்” என்று உறுதியாக தெரிவித்தார். உடனே அதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அக்கோரிக்கையை நிராகரித்தனர்.

**

மேலும் படிக்க

**

**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share