Rஆட்டோ ஆனந்தியின் அசத்தல் லுக்!

Published On:

| By Balaji

மாரி – 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, படம் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

வடசென்னை படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் மாரி 2. பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆட்டோ ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஆட்டோ ஓட்டுநர் உடையில் மூக்குத்தி அணிந்து சாய் பல்லவி இடம்பெற்ற புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி கவனம் பெற்றன. ‘மலர் டீச்சராகப் பார்த்த சாய் பல்லவியா இது?’ என்று ஆச்சர்யம்கொள்ள வைத்த அந்தப் புகைப்படங்களைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் தனுஷுடன் அவர் டூயட் ஆடும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

டிசம்பர் மாதம் படம் வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில் படத்துக்குத் தணிக்கை துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் முதல் பாகத்தின் பாடல்கள் வரவேற்பு பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கான பாடல்கள் வெளியீடு குறித்து படக்குழு எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருந்தது. தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரவுடி பேபி’ என்ற பாடலை நவம்பர் 28ஆம் தேதி வெளியிடவுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share