Rஆடித் திருவிழாவில் ரவுடி கொலை!

Published On:

| By Balaji

மதுரையில் ஆடித் திருவிழாவின் போது பொதுமக்கள் மத்தியில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் வைகை ஆற்றின் நடுவே மைய மண்டபத்தின் அருகே உள்ள கோயிலில் நேற்று (ஜூலை 19) இரவு ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இவ்விழாவிற்காக மதுரை சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வருகை தருவர்.

இந்த நிலையில், திருவிழாவுக்கு வந்த கரும்பாலை பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற பட்டாசுவை, ஒரு கும்பல் ஓட ஓட விரட்டியது. அப்போது, மைய மண்டபத்தின் அருகே கீழே விழுந்த ராஜசேகரை, அந்த கும்பல் பொது மக்கள் மத்தியில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது. இதைகண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் ராஜசேகரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பற்றி விசாரித்ததில் ராஜசேகர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த கொலைக்குத் தொடர்புடையதாக 7 பேரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்பகை காரணமாக ராஜசேகரைக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள போலீசார், மைய மண்டப கோயில் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share