ரயில் பாதையில் நடப்பவர்களைத் தூக்கிச் செல்லும் எமதர்மன்!

Published On:

| By Balaji

இந்த ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது 721 பேர் வரை உயிரிழந்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தண்டவாளத்தில் மக்கள் நடப்பதையும், கடப்பதையும் தடுக்க பல்வேறு முயற்சிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதன்படி ரயில் தடங்களில் நடப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதற்கு மேற்கு ரயில்வே ஒரு சுவாரஸ்யமான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

மேற்கு ரயில்வே மற்றும் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எமதர்மன் வேடம் அணிந்து தண்டவாளம் பகுதிகளில் வலம் வரும் அந்த நபர், ரயில் பாதைகளில் நடப்பதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

இதுமட்டுமின்றி ஓடும் ரயிலில் ஏற முயலும் நபர்களைத் தடுப்பதும், தண்டவாளத்தில் நடந்து செல்பவர்களை அங்கிருந்து தூக்கிச் சென்றும் விழிப்புணர்வில் ஈடுபடுகிறார்.

முன்னதாக ஹெல்மெட் அணியாமல் சாலையில் செல்பவர்களிடம், எமதர்மன் வேடம் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். தற்போது ரயில்வே துறையும் இந்த முறையைக் கையிலெடுத்துள்ளது. மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் இந்த எம தர்மராஜாவின் செயல் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share