கொரோனா: இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!

Published On:

| By Balaji

இந்தியாவில் 2021 பிப்ரவரியில் ஒருநாள் பாதிப்பு 2.87 லட்சமாக இருக்கும் என்று Massachusetts institute of technology ஆய்வு முடிவில் தெரியவந்தது. அதற்கேற்ற வகையில் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 4 தினங்களில் மட்டும் இந்தியாவில் கிட்டதட்ட ஒரு லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 7ஆம் தேதி 22,252 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 7,19,665 ஆக அதிகரித்தது. தொடர்ந்து ஒரு நாள் பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாகவே பதிவாகி வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி மொத்த பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,506 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 7,93,802ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 475 பேர் உட்பட இதுவரை 21,604 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 2,76,685 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,95,513 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் விகிதம் 62.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையிலும், இந்தியாவில் சமூக பரவல் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் 1.18 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 5,45,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share