q8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து!

Published On:

| By Balaji

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் கட்டாயம் தேர்ச்சி செய்யும் முறையை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டம், கடந்த 2010-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை ‘பெயில்’ ஆக்கக்கூடாது என்றும், அவர்களைக் கட்டாய தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

ஆனால், இந்த முறையால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கட்டாய தேர்வு முறையை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது.

இதில், கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களை பெயில் செய்வதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் பெயில் ஆக்குவதற்கு முன் அந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்.

இது போல் இந்தியாவில் 20 சர்வதேச கல்வி நிறுவனங்களை தொடங்கவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாற்றங்கள், இலவச கல்வி உரிமை மசோதாவில் சேர்க்கப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel