நெல்லை விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 பேருக்கு கொரோனா!

Published On:

| By Balaji

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 47 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும், தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக்கப்பட்டு, பரிசோதனைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் 147 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று அவர்களின் முடிவுகள் வெளியானது. அதில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பத்தமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஓரே நாளில் மட்டும் 277 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வள்ளியூரில் 31 பேரும், பாளையங்கோட்டையில் 25 பேரும், அம்பா சமுத்திரத்தில் 21 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தனியார் குடியிருப்பு அடுக்குமாடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தீவன ஆலையில் 69 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தீவன ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டன.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share