q2.0: இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக…

Published On:

| By Balaji

v

2.0 திரைப்படத்தைப் பற்றி இனிவரும் செய்திகள் எல்லாமே ஒரு சாதனையாகவோ அல்லது ஏற்கெனவே இருக்கும் சாதனையை உடைப்பதாகவோ தான் இருக்கும். ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு கொண்டாட்டமென இசை வெளியீடு, டீசர், ட்ரெய்லர் விழாக்களை 2.0 திரைப்படத்தைத் தயாரிக்கும் லைகா திட்டமிட்டிருக்கிறது.

இதன் முதல் கட்டமாக வருகிற அக்டோபர் 27ஆம் தேதி இசை வெளியீட்டு விழாவை துபாயிலுள்ள பிரபலமான Burj Khalifa கட்டடத்தில் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். Burj Khalifaவில் ஒரு திரைப்பட விழா என்பது அவ்வளவு சுலபத்தில் சாத்தியமில்லை. மிஷன் இம்பாசிபுள் திரைப்படம் படமாக்கப்பட்டபோதே, டாம் குரூஸை விட தங்களது கட்டடத்துக்குப் பெருமை கிடைக்கும் என்பதாலேயே Burj Khalifa நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்திய சினிமாவில் வெல்கம் பேக் என்ற இந்திப் படத்துக்கு, பின்னணியில் Burj Khalifa கட்டடத்தைக் காட்டிக்கொள்ள அனுமதி வழங்கியது. மற்றபடி எந்தத் திரைப்படமும் Burj Khalifaவை தொட்டதில்லை. அந்தப் பெருமை ரஜினி படத்துக்குக் கிடைக்கும் விதத்தில், விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

இசை விழா தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே, துபாயின் பல்வேறு பகுதிகளிலும் 2.0 படத்தைப் பற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கிட்டத்தட்ட முப்பத்து ஐந்தாயிரம் பேரை விழாவுக்கு வரவழைக்க வேண்டும் என்று லைகாவின் தலைமை நிர்வாக இயக்குநர் ராஜு மகாலிங்கம் ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel