Qபாலிவுட் நடிகை ரீமா லஹூ மறைவு !

public

பிரபல இந்தி நடிகை ரீமா லஹூ மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. மும்பையில் வசித்து வந்த அவருக்கு நேற்று நள்ளிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

சல்மான் கான் ஹீரோவாக அறிமுகமான ’மைனே பியார் கியா’ படத்தில் அவர் அம்மாவாக நடித்தவர் இவர். மேலும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களாக இருக்கும், ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகிய நடிகர்கள் நடித்த பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர். தொடர்ந்து சாஜன், வாஸ்தவ், குச் குசி ஹோதா ஹை, ஹம் ஆப்கே ஹைன் கோன், மற்றும் ஹம் சாத்-சாத் உட்பட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவர் 70 களின் பிற்பகுதியிலும் 80 களின் தொடக்கத்திலும் இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் பணிபுரிந்தார். மேலும் ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார் அதில் ‘து து மெயின் மெயின்’ மற்றும் ‘ஸ்ரீமன் ஸ்ரீமதி’ போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளில் அடங்கும்.

மறைந்த ரீமா, மராத்தி நடிகர் விவேக் லஜூவை திருமணம் செய்திருந்தார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு மிருன்மாயி என்ற மகள் உள்ளார். இவர் இந்தி படங்களில் நடித்துவருகிறார்.

நடிகை ரீமா லஹூ மரணத்திற்கு நடிகர்கள் அக்‌ஷயகுமார். ரிஷிகபூர்,ராகினி கன்னா,ரித்தீஷ் தேஷ் முக்,உள்பட பலர் இரங்கள் தெரிவித்து உள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *