Qசென்னையில் பிடிபட்ட ரூ.1.36 கோடி!

public

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரூ.1.36 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து ஆந்திராவை சேர்ந்த நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ், நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் இன்று(மார்ச் 25) காலை 6.45 மணியளவில் சிட்டி டவர் ஹோட்டல் அருகே சந்தேகத்துக்குரிய 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற போக்குவரத்து போலீஸ் ஏட்டுகள் மதியழகன், பரமசிவம் ஆகிய இருவரும் இதுகுறித்து பூக்கடை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பூக்கடை போலீசார் நால்வரையும் சோதனையிட்டனர். அப்போது, நான்கு பேரும் தங்களது உடலில் ரூ.1 கோடியே 36 லட்சம் பணத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிடிபட்ட 4 பேரும் பாஷா, சீனிவாசலு, ஆஞ்சநேயலு, ஷேக்சலீம் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் சென்னைக்கு இந்த பணத்தை கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து நால்வரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருநீர்மலை பகுதியில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.72 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர் பறக்கும் படையினர். இதுகுறித்து சந்திரமோகனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பிரானூர் எல்லை குற்றாலம் சாலையில் பறக்கும் படை அதிகாரி சர்ச்சில் ஜெபராஜ் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த காரில் ஆவணமின்றி ரூ.4 லட்சத்து 78 ஆயிரத்து 100 ரூபாய் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜகானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *