qஆசியாவின் முதல் தன்பாலின திருமணச் சட்டம்!

public

ஆசியாவில் முதல்முறையாக தன்பாலின திருமணச் சட்டம் தைவான் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது.

2017ஆம் ஆண்டில் ஒரே பாலினத்தவர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்வதற்கு உரிமையுண்டு என தைவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இதற்கு தேவையான மாற்றங்களை மேற்கொண்டு சட்டம் இயற்றும்படி தைவான் நாடாளுமன்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தன்பாலினத்தவர் சட்டப்படி திருமணம் செய்துகொள்வது தொடர்பான மூன்று வேறுபட்ட மசோதாக்கள் தைவான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

மூன்று மசோதாக்களில் மிகவும் முற்போக்கான மசோதா சட்டமாக நிறைவேறியுள்ளது. மசோதா நிறைவேற்றத்தை எதிர்பார்த்து ஏராளமான தன்பாலின உரிமை ஆதரவாளர்களும், செயற்பாட்டாளர்களும் தைவான் தலைநகர் தைபேவில் மழையில் காத்திருந்தனர். அரசு தாக்கல் செய்த மசோதாவிற்கு ஜனநாயக முற்போக்குக் கட்சியின் ஆதரவால் 66 வாக்குகள் கிடைத்தது. இதை தைவான் அதிபர் த்சய் இங் வென் சட்டமாக இயற்றிய பின் தன்பாலின திருமணம் சட்டப்படி நடைமுறைக்கு வரும். பல ஆண்டுகளாக தன்பாலின உறவுக்கான உரிமைகளை கோரி வந்த செயற்பாட்டாளர்களின் வெற்றியாக இது கருதப்படுகிறது.

வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன் அதிபர் த்சய் இங் வென் அவரது ட்விட்டர் பக்கத்தில், “இப்பிரச்சினையால் குடும்பங்கள், தலைமுறைகள், மதக் குழுக்களும் கூட பிரிந்து கிடக்கின்றன என்பதை அறிவேன். இன்று, வரலாறு படைப்பதற்கும், உலகின் முற்போக்கு கருத்துகள் கிழக்கு ஆசிய சமூகத்திலிருந்தும் தோன்றும் என்பதை உலகிற்கு காட்டுவதற்கும் நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். தைவான் நாடாளுமன்றத்தின் 113 தொகுதிகளில் த்சய் இங் வென் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கட்சி 68 தொகுதிகளைக் கொண்டுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://minnambalam.com/k/2019/05/17/27)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://minnambalam.com/k/2019/05/16/93)

**

.

**

[கேக் வெட்டிய விஜய்](https://minnambalam.com/k/2019/05/16/87)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://minnambalam.com/k/2019/05/16/70)

**

.

**

[ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!](https://minnambalam.com/k/2019/05/16/26)

**

.

**

[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://minnambalam.com/k/2019/05/15/45)

**

.

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *