Qவேலூர் : தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Published On:

| By Balaji

ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூரில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ இன்று (ஜூலை 17) மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தினார்.

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன.

பறக்கும் படை சோதனை, பிரச்சாரங்கள் என தேர்தல் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, டி.ஜி.பி. திரிபாதி, செலவினப் பார்வையாளர் முரளி குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேலூரில் இருந்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சண்முகசுந்தரம், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பர்வேஸ்குமார், மற்றும் தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அங்கு 1553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள், தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

பணப்பட்டுவாடா, பறக்கும்படை சோதனை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில் பணப்பட்டுவாடா புகாரின் பேரில் கடந்த முறை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது போல இம்முறை நடந்துவிடக் கூடாது என்பதால் கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு சத்ய பிரதா சாஹூ அறிவுறுத்தியிருக்கிறார். மேலும் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய அவர் விரைவில் வேலூருக்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share