இந்தியா வியட்நாமின் சிறந்த வர்த்தகப் பங்குதார நாடாக உள்ளது என்று அந்நாட்டின் ஜனாதிபதி ட்ரான் டாய் குயாங் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில், இந்திய-வியட்நாம் வர்த்தகம் வேகமாக அதிகரித்து வருகிறது. வியட்நாமின் முக்கிய வர்த்தக நாடாக இந்தியா விளங்குகிறது. வியட்நாமின் முக்கியமான பத்து வர்த்தக நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகியுள்ளது. 2020ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 1500 கோடி டாலராக அதிகரிக்கும். தற்போதைய சூழலில் ஆடைகள் மற்றும் காலணிகள் வர்த்தகம் தான் அதிகளவில் நடந்து வருகிறது. சுற்றுலாத்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் பணிகளையும் செயல்படுத்த வேண்டியுள்ளது.
வியட்நாமின் தற்போதைய மக்கள்தொகை 10 கோடியாகும். வியட்நாமின் பொருளாதார வளர்ச்சியும் வேகமாக அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் பாதுகாப்பான பொருளாதாரமாகவும் விளங்குகிறது. முதலீடுகளும் பாதுகாப்பாகவே இருக்கின்றன. வியட்நாமின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரையுள்ளது. வியட்நாமுடனான வர்த்தகத்தில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது” என்றார். தொழில்துறை அமைப்புகளான சி.எஸ்.ஐ., எஃப்.ஐ.சி.சி.ஐ. மற்றும் அசோசெம் ஒருங்கிணைத்த இந்தியா-வியட்நாம் தொழில் மன்றத்தில் கலந்துகொண்டு பேசுகையில் ட்ரான் இவ்வாறு தெரிவித்தார்.
�,”