மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் எழுந்து மொபைலைத் தேடும் தலைமுறை இப்போது அதிகரித்திருக்கிறது.
அந்த வகையில் தரமான, ஆழமான, நம்பகத்தன்மைமிக்க செய்திகளைச் சாமானியரும் பெற வேண்டும் என்பதே மின்னம்பலத்தின் குறிக்கோள்.
பெருநிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் பேராளுமைக்குள் சிக்கி இணைய உலகம் தனது சுதந்திரத்தை இழந்து தவிக்கும் இச்சூழலில், நமக்கான சுதந்திர தளத்தைக் காப்பதற்கு உங்களின் பங்களிப்பு மிகவும் தேவை.
ஜனநாயகம் என்னும் தேரை நாம் அனைவரும் கூடி இழுத்துச் செல்ல, நம்பகத்தன்மையுடைய தகவல்களே வடங்கள் ஆகும்.
நாள்தோறும் மூன்று பதிப்புகளாக காலை 7 மணி, மதியம் 1 மணி, மாலை 7 மணி என்று முப்பொழுதுகளிலும் வெளியாகும் நவீன தமிழ் டிஜிட்டல் தினசரி மின்னம்பலம் நம்பகத் தன்மையுடைய செய்திகளை மட்டுமே தாங்கி வருகிறது.
எந்தக் கட்சி அல்லது தனிநபரின் செல்வாக்குக்கும் ஆட்படாமல் தனித்துவப் பாதையில் மக்களுக்காக நடைபோடும் ஊடகமே மின்னம்பலம். இந்த நிலையில் நமக்கான உள்ளீட்டு, வெளியீட்டு, தொழில்நுட்பச் செலவுகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. இந்தச் செலவுகளை எதிர்கொள்ள வாசகர்களான உங்களின் உதவியை மட்டுமே நம்பி இந்தப் பயணத்தைத் தொடர்கிறோம். உங்கள் உதவியை சந்தா மூலமாக எங்களுக்கு வழங்க வேண்டுகிறோம்.
மின்னம்பலத்தில் வெளியாகும் சிறப்புக் கட்டுரைகளை வாசிப்பதற்குத் தாங்கள் மின்னம்பலம் மொபைல் இதழின் சந்தாதாரர் ஆகுங்கள். சந்தா செலுத்தாதவர்கள் செய்திகளை வாசிக்க முடியும் என்றாலும், சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க தாங்கள் சந்தாதாரர் ஆக வேண்டியது இனி அவசியமாகிறது.
விரைவில் இந்த சந்தா முறை அமலுக்கு வருகிறது.
சந்தா வடிவிலான உங்கள் பங்களிப்பு மின்னம்பலம் இதழுக்கான உரம் மட்டுமல்ல; ஊடக ஜனநாயகத்துக்கான உரமாகவும் அமையும். மின்னம்பலத்துக்கான சந்தா கட்டணம் மற்ற நாளிதழ்களின் விலையில் கால் பங்கு மட்டுமே.
1 வாரத்துக்கான சந்தா ரூ 20 மட்டுமே
4 வாரங்களுக்கான சந்தா ரூ 50 மட்டுமே
10 வாரங்களுக்கான சந்தா ரூ 100 மட்டுமே
52 வாரங்களுக்கான சந்தா ரூ 500 மட்டுமே
260 வாரங்களுக்கான சந்தா ரூ.2,000 மட்டுமே
**சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…**
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
**பீம் (BHIM) [Android](https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp) / [IOS](https://itunes.apple.com/in/app/bhim-making-india-cashless/id1200315258?mt=8)**
**டெஸ் (TEZ) [Android]( https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.paisa.user) / [IOS](https://itunes.apple.com/in/app/tez-a-payments-app-by-google/id1193357041?mt=8)**
**போன்பே (PhonePe) [Android](https://play.google.com/store/apps/details?id=com.phonepe.app) / [IOS](https://itunes.apple.com/in/app/phonepe-indias-payments-app/id1170055821?mt=8)**
**பேடிஎம் (Paytm) [Android](https://play.google.com/store/apps/details?id=net.one97.paytm) / [IOS](https://itunes.apple.com/in/app/paytm-payments-bank-account/id473941634?mt=8)**
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டண சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
**[en.minnambalam.com/subscribe.html](https://en.minnambalam.com/subscribe.html)**
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
.
**சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் எண் +91 6380977477**
�,