qராகுல் கர்நாடகத்தில் போட்டியிட வேண்டும்!

Published On:

| By Balaji

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் போட்டியிட வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களுக்கு கர்நாடகம் எப்போதுமே ஆதரவளித்து ஊக்கப்படுத்தியுள்ளது. இது இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது. நமது அடுத்த பிரதமரான ராகுல் காந்தியும் கர்நாடகத்தில் போட்டியிட்டு புதிய வளர்ச்சிக்கான முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி மார்ச் 7ஆம் தேதியன்று வெளியிட்டது. அதில் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் கடும் போட்டியை சந்தித்து வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. அந்தத் தேர்தலில் அவருக்கு 408651 வாக்குகள் கிடைத்தன. ஸ்மிரிதி இரானிக்கோ 300748 வாக்குகள் கிடைத்தன. சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். காங்கிரஸின் இரண்டு முக்கிய தேசிய தலைவர்களும் கர்நாடகத்தில் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சிக்மகளூர் தொகுதியில் இந்திரா காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதே தொகுதியில் 1978ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் இந்திரா காந்தி வெற்றிபெற்றார். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கர்நாடகத்தின் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share