qமெட்ரோ ரயிலின் மூன்றாம்கட்ட பணி துவக்கம்!

Published On:

| By Balaji

சென்னையில் மூன்றாம்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 1) அதற்கான மண் பரிசோதனை நடைபெற்றது.

மெட்ரோ ரயில் பணிகள் இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், மூன்றாம்கட்ட திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதில், மாதவரம் முதல் சிறுசேரி வரை 45.77 கிலோமீட்டர் தூரம் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஓஎம்ஆர் சாலையில் கொட்டிவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் வரவுள்ளன. கொட்டிவாக்கம் நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பி.டி.சி.காலனி, ஓக்கியம் துரைப்பாக்கம், ஒக்கியம் பேட்டை, காரப்பாக்கம்,சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான நில அளவை மேற்கொள்ளும் ஆய்வுப் பணிகள் கடந்த மாதம் சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள பெருங்குடியில் தொடங்கப்பட்டன. இதற்கான மண் பரிசோதனை பணிகள், இந்தப் பகுதிகளில் நேற்று நடைபெற்றது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share