தமிழக முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (ஆகஸ்டு 6) காலமானார்.
திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்த ஜெனிபர் சந்திரன், 1996 ஆம் ஆண்டு, திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீனவ சமூகத்தைச் சேர்ந்த ஜெனிபர், திமுக ஆட்சிக் காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார்.
ஆனால், அதன் பிறகு, 2004 ஜெயலலிதா ஆட்சியின் போது, திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு, மாநில மீனவர் அணியின் இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இவர் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியும் வகித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து, ஜெனிபர் சந்திரன் 2010ல் நீக்கப்பட்டார்.
சமீப காலமாக உடல்நிலை பாதிப்படைந்த ஜெனிபர் சந்திரன், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நிலை மோசமானதால், இன்று (ஆகஸ்டு 6) அவர் காலமானார்.�,