Qமுந்திவரும் நேர்கொண்ட பார்வை!

Published On:

| By Balaji

அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் புதிய ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் நேர்கொண்ட பார்வை படத்தை முதலில் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்ட படக்குழு ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு மாற்றியது. பக்ரீத், சுதந்திர தினம் என விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வருவதால் படக்குழு அந்தத் தேதியை தேர்வு செய்திருந்தது. அதன் பின்னர் ஆகஸ்ட் 1ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று கூறப்பட்டது.

தற்போது படக்குழு ஆகஸ்ட் 8ஆம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதிலும் அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் தொடர்கிறது.

ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும், பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் வித்யா பாலன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.

இமான் இசையமைப்பில் ஏற்கெனவே இரு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகவுள்ளன.

ஜனவரி மாதம் அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாகி வசூல் சாதனை படைத்த நிலையில் அடுத்த கொண்டாட்டத்துக்கு அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share