ராஜஸ்தானில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விமானச் சேவை அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் கேசரி சிங் கூறியதாவது, “மாநிலத்தில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் தற்போது 19 மாவட்டங்களில் விமானத் தளங்கள் உள்ளன. முக்கிய நகரங்களை இணைக்கும் மத்திய அரசின் ‘உதான்’ திட்டத்தின் மூலமாகவும் மாநில அரசின் திட்டங்கள் மூலமாகவும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விமானச் சேவை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், முக்கியமான இடங்களை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.�,