மிஸ்டர் லோக்கல் படத்துடன் மே 17 அன்று களமிறங்கிய மான்ஸ்டர் தமிழகத்தில் குறைவான திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
இயக்குநர் எஸ்.ஜே சூர்யா நியூ படத்தின் மூலம் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பின் அவருக்கென வயது வந்தோர் மத்தியில் ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. குழந்தைகளுடன் குடும்பங்கள் அவர் நடித்து வெளியான படங்களை பார்ப்பது எட்டாக்கனியாகவே இருந்தது.
முதன்முறையாக குழந்தைகளுடன் குடும்பங்கள் தியேட்டருக்கு வந்து பார்க்கும் எஸ்.ஜே.சூர்யா படமாக மான்ஸ்டர் அமைந்திருக்கிறது.
வெள்ளி, சனி ஆகிய நாட்களில் இப்படத்திற்கான வசூல் மந்தமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை படத்தின் வசூல் அதிகரித்திருக்கிறது. திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டு, காட்சிகள் கூடுதலாக்கப்பட்டுள்ளது. சுமார் 5 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட மான்ஸ்டர் தமிழகத்தில் மூன்று நாட்களில் சுமார் 2.15 கோடி ரூபாயை மொத்த வசூலாக பெற்றிருக்கிறது. எதிர்வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கக் கூடும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.
�,”