Qபோட்டிக்குத் தயாராகும் ஹானர்!

public

�நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் புதிய வசதிகளை வெளியிட்டு பயனர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன. புதிய நிறுவனங்கள் அதிக வசதிகளைக்கொண்ட மொபைல்களைக் குறைந்த விலைக்கு வழங்கி பயனர்களை ஈர்த்து வருகின்றன.

ஆன்லைனில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஹானர் நிறுவனம் மாபெரும் விற்பனை செய்தது. ஆனால், பின்னர் பல நிறுவனங்களின் போட்டி அதன் விற்பனையைக் குறைந்தது. எனவே, மீண்டும் புதிய மாடல்களை அதிக வசதியுடன் குறைந்த விலையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

வருகிற டிசம்பர் மாதம் ஹானர் 7X என்ற புதிய மாடலை அந்நிறுவனம் வெளியிட உள்ளது. 5.93 இன்ச் திரையளவும், 3340 mAH பேட்டரி சத்தியுடனும் இந்த மாடல் வெளியாக உள்ளது. மேலும், இந்த மாடல் 8 MP முன்புற கேமரா, மற்றும் 12MP டூயல் கேமரா வசதி கொண்டது. 4GB RAM கொண்டுள்ள இந்த மாடல் 32 GB, 64 GB, 128 GB என மூன்று விதமாக வெளிவர உள்ளது. இதன் விலை ரூ.12,890 என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த விலைக்கு மீண்டும் தனது விற்பனையைத் தொடங்கும் ஹானர் நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட தயாராக உள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *