ஒரு சொல் கேளீரோ! – 8: அரவிந்தன்
ஆல், ஓடு, உடன், க்கு, ஐ, இன், இல் முதலான பின்னொட்டுக்கள் வேற்றுமை உருபுகள் எனப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தாமலேயே எழுதினால் பொருள் குழப்பம் வரும்.
வேற்றுமை உருபுகள் பற்றிப் பார்ப்பதற்கு முன், நேர் கூற்று – அயல் கூற்று தொடர்பாக நாம் கவனிக்க வேண்டிய முக்கியமானதொரு கூறினைப் பார்ப்போம்.
ராமநாதன் அவனுடைய வாகனத்தை ஓட்டிச் சென்றான்.
முருகன் அவனுடைய புத்தகத்தை அவனுடைய மடிமீது வைத்திருந்தான்.
மேலே உள்ள இரு வாக்கியங்களை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது எந்தத் தவறும் இல்லை எனத் தோன்றும். ஆனால், அவற்றில் தவறுகள் உள்ளன. மாற்றி எழுதப்பட்ட இந்த வாக்கியங்களைப் பாருங்கள்:
ராமநாதன் *தன்னுடைய* வாகனத்தை ஓட்டிச் சென்றான்.
முருகன் *தன்னுடைய* புத்தகத்தைத் *தன்* மடிமீது வைத்திருந்தான்.
ராமநாதன் அவனுடைய வாகனத்தை… என எழுதினால், யாருடைய வாகனத்தை என்னும் கேள்வி எழலாம். அந்த வாக்கியத்தில் இத்ற்கான பதில் இல்லை. ராமநாதன் தன்னுடைய என எழுதினால் இந்தக் கேள்வி எழ வாய்ப்பே இல்லை.
சொல்லவரும் பொருளைக் குழப்பம் இல்லாமல் வெளிப்படுத்துவதே தெளிவான நடைக்கான இலக்கணம். முறையாகத் தமிழை எழுதினால் குழப்பம் வராது.
**வேற்றுமை உருபுகள்**
அவனால் முடிந்தது, அவளோடு இணைந்து செய், தொண்டர்களுடன் சேர்ந்து சாப்பிடு, அவனுக்குக் கொடு, அவற்றின் மீது…
மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில் வேற்றுமை உருபுகள் (ஆல், ஓடு, உடன், க்கு…) இருப்பதைப் பாருங்கள். இந்த வாக்கியங்களில் வேற்றுமை உருபுகளைத் தவிர்த்துவிட்டு எழுத இயலாது. இயல்பாகவே இவை இடம்பெற்றுவிடும். ஆனால் இந்த எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்:
தாத்தா பெயரை வைத்தார்கள் – தவறு
தாத்தாவின் பெயரை வைத்தார்கள் – சரி
மதுரை சென்றார் – தவறு
மதுரைக்குச் சென்றார் – சரி
பேச்சு வழக்கில் தாத்தா பெயரை வைத்தோம் என்று சொல்லலாம். ஆனால், எழுதும்போது தத்தாவின் பெயரை வைத்தோம் என்றே எழுத வேண்டும்.
மதுரை என்பது ஒரு நபரின் பெயராக அல்லது அடைமொழியாகக்கூட இருக்கலாம். எனவே, மதுரைக்கு என எழுதும்போது இந்தக் குழப்பம் வராது.
இந்த எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்:
சிறை சென்றார்
முத்தம் கொடுத்தாள்
பரிசளித்தான்
கடல் தாண்டி
இந்த உதாரணங்களில் சிறைக்குச் சென்றார், முத்தத்தைக் கொடுத்தாள், பரிசை அளித்தான், கடலைத் தாண்டி என்று சொல்லாமலேயே அந்தப் பொருள்கள் வந்துவிடுகிறன. சில சொற்களும் சொற்சேர்க்கைகளும் நம்மிடையே அதிகம் புழங்குவதால் உண்டாகும் வசதி இது.
எனவே, இலக்கணம், நடைமுறை ஆகிய இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வாசகருக்குப் புரியுமா, புரியாதா என்னும் கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டும்.
**இரு விதப் பயன்பாடுகள்**
மேல், மீது, பற்றி ஆகிய சொற்களைப் பயன்படுத்துவதில் இரண்டு விதங்கள் உள்ளன.
மேசைமேல், உடல்மீது, அதுபற்றி
மேசையின் மேல், உடலின் மீது, அதைப் பற்றி
இந்த எடுத்துக்காட்டுகளைப் பார்க்கும்போதே வித்தியாசம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.
**உயர்திணை, அஃறிணை**
எழுதும்போது உயர்திணை – அஃறிணை வேறுபாட்டினை மனதில் கொண்டு எழுத வேண்டும்.
அவர்கள் வந்தார்கள், அவை வந்தன என்று எழுதும்போது குழப்பம் ஏற்படுவதில்லை. ஆனால், உயர்திணையும் அஃறிணையும் ஒரு வாக்கியத்தில் சேர்ந்து வரும்போது வந்தார்கள், வருகிறார்கள் என்று உயர்திணைக்குரிய சொல்லையே பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு:
… இதனால் அந்தப் பகுதியில் உள்ள மனிதர்களும் கால்நடைகளும் கஷ்டப்படுகிறார்கள்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் திங்களன்று)
[தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/03/23)
[மொழியில் இருக்க வேண்டிய நெகிழ்வு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/05/15?fbclid=IwAR1X6OfBmGxaOj5I1JZ3F7DpASWVI4_tq1JGbDUbT8zVBqT9sFIkG3Iq9vA)
[ஒருமை – பன்மை மயக்கம் எப்படி ஏற்படுகிறது?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/08/15)
[ஒருமை – பன்மை: மேலும் சில விதிகள்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/10/18?fbclid=IwAR28FXHq0ntYuLz75awN-C4HJaQ61L9AazWfXhyJeZDPgVAYdV83XchJdeE)
[இது யாருடைய செய்வினை?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/13/47?fbclid=IwAR3l9uW8jS59Nnvdtq6qOfiioLHhUFEfeiD8XvzFrJLg80q0HHtKBgRDPhA)
[சொன்னது சொன்னபடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/17)
[எதற்கு இத்தனை கேள்விக் குறிகள்?!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/14)
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
**
[வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/50)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
.�,”