Qபேஸ்பாலராக மாறிய ரோஹித் ஷர்மா

public

அமெரிக்காவில் மேஜர் லீக் பேஸ்பால் தொடரை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தொடங்கி வைத்தார்.

அமெரிக்காவில் மேஜர் லீக் பேஸ்பால் தொடர் நேற்று முன்தினம் (ஜூன் 4) தொடங்கியது. இதில் சீட்டில் மரினர்ஸ் மற்றும் தம்பா பே ராய்ஸ் அணிகள் மோதிய முதல் போட்டியை `ஃபர்ட்ஸ்ட் பிட்ச்’ எனும் முறையில் பந்தை எறிந்து ரோஹித் சர்மா தொடங்கி வைத்தார்.

தனது மனைவியுடன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வந்த ரோஹித் சர்மா இந்தப் போட்டிக்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். இந்தப் போட்டியைத் தொடங்கி வைத்ததன் மூலம் இந்தக் கெளரவத்தைப் பெறும் முதலாவது இந்தியர் எனும் பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.