qபெண் கலெக்டரை அவமரியாதையாக பேசிய எம்எல்ஏ

Published On:

| By Balaji

சட்டமன்றத்தில் ஏற்க முடியாத பேச்சுகளை பேசினால் அவை குறிப்பில் இருந்து நீக்குவது வழக்கம். அதுவே சட்டமன்றத்திற்கு வெளியே சமூக வெளியில் பேசினால்?வழக்கு பாயும் என்கின்றனர் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

சட்டீஸ்கர் சீத்தாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் அமர்ஜீத்பகத். அவர் ஒரு போராட்டத்தில் பங்கேற்றபோது, ‘மாவட்ட கலெக்டர் ரீது சயின் பார்பதற்கு திரைப்பட ஹீரோயின் போலவே இருக்கிறார்’ என்று தொடங்கி மோசமாக பேசியுள்ளார். தொடர்ந்து தனது பேச்சின் மூலமாக பாஜக அரசின் அமைச்சர் கேதார் காஷ்யப்பை , ‘ மனநிலை சரியில்லாதவர்’ என்றும் பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் விரலாக பரவியது. பெண்களை தவறாக பேசியவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது. இதையடுத்து அமர்ஜீத்பகத் மீது ‘போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டார், நாகரீகமற்ற முறையில் பேசினார்’ என்ற பிரிவுகளில் கீழ் வழக்குபதிவு செய்துள்ளது சட்டீஸ்கர் காவல்நிலையம்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel