பணத்தையும், அச்சுறுத்தல்களையும் பயன்படுத்தி மத்தியில் ஆளும் பாஜக அரசு மாநில அரசுகளை கவிழ்த்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் கடுமையான அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது. அங்கு காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள (ஜேடிஎஸ்) கூட்டணியை சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்றுள்ளனர். இவ்விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. எம்.எல்.ஏக்களின் ராஜினாமா, தகுதிநீக்கம் குறித்து ஜூலை 16ஆம் தேதி வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று (ஜூலை 12) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் பணத்தையும், அச்சுறுத்தல்களையும் பயன்படுத்தி மாநில அரசுகளை பாஜக கவிழ்த்து வருகிறது. முதலில் கோவாவிலும், வடகிழக்கிலும் என்ன நடந்ததென்பதை அனைவரும் பார்த்தீர்கள். இதுதான் அவர்களது நடைமுறையே. பாஜகவிடம் பணமும், அதிகாரமும் இருக்கிறது. அவர்கள் அதை பயன்படுத்துகின்றனர். இதுதான் நிதர்சனம்” என்று தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், “உண்மைக்காக காங்கிரஸ் போராடி வருகிறது. உண்மைதான் காங்கிரஸை வலிமைபெறச் செய்கிறது” என்று பதிலளித்தார். தன் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்குகள் பற்றி பேசிய அவர், “அடக்குமுறைக்கும், அச்சுறுத்தல்களுக்குமான முயற்சிகள் நடைபெறுகின்றன. அதெற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். நான் தொடர்ந்து போராடுவேன். இது அரசியல் சாசனத்திற்கும், நாட்டின் எதிர்காலத்திற்குமான போராட்டம். ஊழலுக்கும், அராஜகங்களுக்கும் எதிரான போராட்டம். இது தொடரும்” என்று தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
�,”