qநியூட்ரினோ: மீண்டும் பயணம் தொடங்கும் வைகோ

Published On:

| By Balaji

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ மீண்டும் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தில் ஈடுபடவுள்ளார்.

தேனி அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைவதன் மூலம் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என தேனி சுற்றுவட்டாரப் பகுதியினரும் அரசியல் கட்சிகளும் சூழலியல் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடிவருகின்றன. இதற்காக வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த நிலையில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இத்திட்டம் சுற்றுப்புறச் சுழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் கடந்த 11ஆம் தேதி தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் மதிமுக உயர்மட்டக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரிலுள்ள தாயகத்தில் அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இன்று (ஜூலை 20) நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் நியூட்ரினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “நியூட்ரினோ ஆய்வகத்தால் பல இலட்சம் டன் பாறைகள் உடைத்து நொறுக்கப்பட்டு சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழ்படும். கதிரியக்க அபாயமும் ஏற்படும் என்பதால்தான் வைகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை ஆணை பெற்றார். தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணமும் மேற்கொண்டு மக்களிடம் நியூட்ரினோ ஆய்வகத்தின் அபாயங்களை எடுத்துரைத்தார்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து, “நடைபயண நிறைவுக் கூட்டத்தில் உரையாற்றிய வைகோ, “நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சித்தால் ஐந்து மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மீண்டும் வருவேன்,” என்று பிரகடனம் செய்தார். ஆனால், மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கி உள்ள தடை ஆணை மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு இவற்றை அலட்சியப்படுத்தி விட்டு நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளது.

எனவே,வைகோ அவர்கள் அறிவித்தவாறு மீண்டும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் ஆகஸ்டு 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்கள் வைகோ தலைமையில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

வைகோவின் நியூட்ரினோ எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தரராஜன், நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் நிர்வாகிகளான லெனின் ராசப்பா, திருமுருகன் காந்தி, ஈரோடு கி.வே.பொன்னையன் மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share