நடிகைகள் காணாமல் போனால் தான் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? சாதாரண மக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதா? என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. தனது 19 வயது மகள் கவுசல்யாவைக் காணவில்லை என்று கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மகேஸ்வரி தனது மகளைக் கண்டுபிடித்து தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் எனது மகளை மீட்டுத் தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று (ஜூன் 13) நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் அதுகுறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 4 மாதங்களுக்கு முன்பு அளித்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நான்கு மாதங்களுக்கு முன்பாக மாயமான இளம் பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. சாதாரண மக்கள் புகார் அளித்தால் இப்படிதான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், நடிகைகள் காணாமல் போனதாகப் புகார் வந்தால் மட்டும்தான் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வாங்கும் சம்பளத்திற்கு அதிகாரிகள் உண்மையுடன் செயல்பட வேண்டும். ஒரு வேளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் என யாராவது இப்படிக் காணாமல் போனால், இதுபோன்று தான் சாதாரணமாக நடந்து கொள்வார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொடர்ந்து, அதிகாரிகள் உண்மையுடன் செயல் பட வேண்டும், இல்லை என்றால் அதற்கான பலன்களை அவர்கள் அனுபவிப்பார்கள் என்று எச்சரித்ததுடன், கவுசல்யா மாயமானது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
**
மேலும் படிக்க
**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**
�,”