அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது தொடர்பான கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ‘பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததால் சிறுபான்மையினர்களின் வாக்குகளை முழுவதும் இழக்க நேரிட்டது. பாஜக மீதான எதிர்ப்பு அதிமுகவையும் பாதித்ததால் தோல்வியைத் தழுவினோம்” என்று கருத்து தெரிவித்திருந்தார். இதுபோலவே அதிமுகவின் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று கருத்து அதிமுகவிலிருந்து எழுந்தது.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று (ஜூன் 13) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம், அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அதிமுகவுடன் கூட்டணி தொடரக் கூடாது என்றோ தொடர வேண்டும் என்றோ சொல்லமாட்டேன். அது அந்தந்த கால சூழ்நிலைக்கு தக்கப்படி நடக்கட்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “தேர்தலை பொறுத்துத்தான் கூட்டணி இருக்கும். தேர்தல் முடிவு என்று வரும் பொழுது, ஒருவரின் தலையில் அனைத்தையும் சுமத்துவது தவறான கருத்து. சேர்ந்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கிறோம். ஆனால் நாடு முழுவதும் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. அதனால் அனாதை பிள்ளைக்கு அப்பன் யாரென்று தேடும் வேலைகள் வைக்காமல், தோல்விக்கான பொறுப்பை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்றார்.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**
�,”