பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேர்வு நடப்பதற்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘மே 12இல் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மே 19இல் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்’ என கூறியுள்ளார்.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற மார்ச் 2ஆம் தேதி தொடங்கி, மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். தேர்வு நடத்துவதற்கு வினாத் தாள்கள், தேர்வு அறைகள் போன்றவை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முதன்முறையாக மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே பொதுத் தேர்வு முடிவுகள் பற்றிய தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 30ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.�,