6
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம் துப்பறிவாளன். அனைத்து வேலைகளும் முடிவடைந்து செப்டம்பர் 14ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.
படம் தணிக்கைக்கு சென்ற நிலையில் தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு `U/A’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த தகவலை விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் வினய்யுடன் சேர்ந்து சான்றிதழை பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.
பிரசன்னா, அண்ட்ரியா போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் துப்பறிவாளன் முன்பதிவு திரையரங்குகளில் தொடங்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை தாண்டியது குறிப்பிடவேண்டியது. சண்டைக்காட்சிகளும், கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில் அமைக்கப்பட்ட காட்சிகளும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
இன்னும் இரண்டு தினங்களில் வெளிவரவுள்ள துப்பறிவாளனுக்கு `U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளதால் அனைவராலும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
�,”