சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு பிளீடராகப் பணியாற்றிய டி.என்.ராஜகோபாலன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய மணிசங்கர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களது ராஜினாமா கடிதங்களை, தமிழக அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பொறுப்பு அரசு பிளீடராக, சிறப்பு அரசு பிளீடராக பணியாற்றி வரும் வி.ஜெயபிரகாஷ் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மறு உத்தரவு வரும் வரை, பொறுப்பு அரசு பிளீடராக பணியாற்றுவார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து நேற்று (நவம்பர் 1) மாலையே, பொறுப்பு அரசு பிளீடராக வி.ஜெயபிரகாஷ் நாராயணன் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டு மீண்டும் இணைந்தபோது கூடுதல் வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெற்றது. அப்போது டி.என்.ராஜகோபாலனும், மணிசங்கரும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.�,