Qதனுஷ் பாடும் ‘இங்கிலீசு லவ்சு’!

Published On:

| By Balaji

தனுஷ் பாடிய ரௌடி பேபி பாடல் இணையத்தில் மாஸ் ஹிட் கொடுத்துள்ள நிலையில் அவர் மற்றொரு பாடலை பாடியுள்ளார்.

பிரெஞ்சு நாவல் ‘The extraordinary journey of the fakir who got trapped in an ikea cupboard ஹாலிவுட் படமாக உருவாகியுள்ளது. ஆங்கிலம், தமிழ், இந்தி என பல மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை கென் ஸ்காட் இயக்கியுள்ளார்.

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் கால் பதிக்கும் படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜெர்னி ஆப் தி பகிர்’ தமிழில் ‘பக்கிரி’ என்னும் பெயரில் வெளிவர இருக்கிறது. இதன் டிரெய்லர் கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 7 ), பக்கிரி படத்தில் இடம்பெறும் ‘இங்கிலீசு லவ்சு’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது.

நடிகர் தனுஷின் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே அவர் குரலில் அமைந்த பாடல்கள் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 3 படத்தில் அமைந்த ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் வெளியான போது அவருக்கு உலகளாவிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. தற்பொழுது இதமான மெலடியாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மதன் கார்க்கியின் வரிகளுக்காக அமித் த்ரிவேதி இசையமைத்திருக்கிறார்.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)

**

**

[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share