தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எப்போதும் இல்லாத அளவுக்குக் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தில் சிக்கியிருக்கிறது தமிழகம். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவிவருகிறது. பொதுமக்கள் தண்ணீர் லாரிகளுக்காகக் காத்திருப்பதையும், கிராமங்களில் ஊற்று தோண்டி நீர் எடுக்கும் காட்சிகளும் தினந்தோறும் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில் தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பாகச் சென்னையில் இன்று (ஜூன் 14) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “மேட்டூர் அணையிலிருந்து வீராணம் ஏரியில் ஒரு டிஎம்சி தண்ணீர் நிரப்பப்படுவதால் அது நவம்பர் வரை பயன்படும். தற்போது செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் இல்லை. பூண்டி ஏரியைப் பொறுத்தவரை 55 எம்.எல்.டி தண்ணீர் தினமும் எடுத்துவருகிறோம். அதனைச் சில வாரங்களுக்கு பயன்படுத்தலாம். அனைவரும் இயற்கையை எதிர்நோக்கி வேண்டுவது மழை வர வேண்டும் என்றுதான். இயற்கை கைவிட்ட நிலையில் பொதுமக்கள் குடிதண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். தண்ணீரை விரயமாக்க வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்து, “சிறிய தெருக்களில் வசிக்கும் மக்களுக்குகூடத் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் லாரிகளிலிருந்து பைப் மூலம் தண்ணீரை விநியோகித்து வருகிறோம்” என்று தெரிவித்தவர், விளைநிலங்களில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், என்ன விலை கொடுத்தாவது மக்களின் தாகத்தைத் தீர்க்கக் கட்சியும் ஆட்சியும் தயாராக இருக்கிறது என்றும் உறுதியளித்தார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறுகையில், “தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. மழைப் பொழிவும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக அனைத்து இடங்களிலும் சீரான முறையில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் மட்டும் நிலத்தடி நீர் குறைந்ததன் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[தண்ணீர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் மதிய உணவை நிறுத்த முடிவு!](https://minnambalam.com/k/2019/06/14/41)**
�,”