டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் டிஜிபி நியமனம் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்தது. டிஜிபிக்கு தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளைதான் மாநில அரசுகள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் இடைக்கால டிஜிபியாக யாரையும் பணியில் அமர்த்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விதிகளை தளர்த்தக் கோரி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதுதொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு இன்று(மார்ச் 13) தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதற்கு முன்பு 2 ஆண்டு பணிக்காலம் உள்ளவரையே டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் டிஜிபிக்கள் நியமனத்திற்கான காலவரம்பை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதமாக உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்தது.
டிஜிபி குறைந்தபட்சம் ஆறு மாதம் பணியாற்ற வேண்டும். ஓய்வு பெற 6 மாதக் காலம் இருந்தாலும், பதவி மூப்பு அடிப்படையில் டிஜிபியாக நியமிக்கலாம். மாநில அரசுகள் சுயமாக டிஜிபிக்களை நியமிக்க முடியாது. யுபிஎஸ்சி மட்டுமே டிஜிபிக்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.�,