சினிஷ் இயக்கத்தில் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘பலூன்’. ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்த போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டார்கள். இப்போது இந்த படத்தில் நடித்திருப்பதால் மறுபடியும் கிசுகிசு கிளம்பியிருக்கிறது. இப்படத்தின் கடைசி படப்பிடிப்பை முடித்து பிறகு அஞ்சலி அங்கிருந்து கிளம்ப ஜெய் ‘அஞ்சு உன்னை மிகவும் மிஸ் பண்ணுறோம்’ ட்வீட்டரில் எழுதினார்.
இன்று பண்டிகை கொண்டாப்படுகிறது. இதனையொட்டி அஞ்சலி தனது ட்வீட்டரில் ரசிகர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது பக்கத்தில், ‘அனைவருக்கு ஹோலி வாழ்த்துக்கள். ‘இன்று வண்ணமயமான நாள். இன்று போல் என்றும் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஜெய் ‘எப்போதும் போல் சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என்று பதில் ட்வீட் செய்திருக்கிறார். மறுபடியும் இவர்களிடையே கெமிஸ்டரி வேலை செய்கிறதோ? என்று பரவலான பேச்சு திரை உலகத்தில் அடிபடுகிறது.�,