சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ2 ப்ளஸ் எனும் புதிய செல்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
லண்டனில் நேற்று (ஜூலை 11) சோனி எக்ஸ்பீரியா தங்களது எக்ஸ் ஏ 2 ப்ளஸ் எனும் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளனர். பிளாக், கிரீன், கோல்டு, சில்வர் வண்ணங்களில் வெளியாகவுள்ள இந்த போன்கள் ஆகஸ்ட் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.
**சிறப்பம்சங்கள்**
6இன்ச் திரை, ஆண்ட்ராய்டு அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளம், Snapdragon 630 SoC, 4GB RAM+ 32GB ROM, 6GB RAM + 64GB ROM, 23 மெகா பிக்சல் கேமரா, 4 கே வீடியோ,3,580mAh பேட்டரி ஆகிய வசதிகள் இதில் உள்ளன. இத்துடன் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்த மாடலின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.�,