சுப்பிரமணியபுரம், ஈசன் ஆகிய முக்கியமான படங்களை இயக்கிய சசிக்குமார், தற்போது முழுநேர கதாநாயகனாக வலம் வருகிறார். அதுவும் தென் மாவட்டங்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளில் சசிக்குமார் சரியாக பொருந்திப்போவதால் தொடர்ந்து படங்கள் அவருக்கு வந்தவண்ணம் உள்ளன. அதிலும் அவரது கம்பெனி புரொடக்ஷன் மூலம் தனது படங்களை தானே தயாரிக்கவும் செய்கிறார். இருப்பினும், சசிக்குமாரின் படங்களில் முன்னணி கதாநாயகிகள் இதுவரை அவரோடு ஜோடி சேரவில்லை என்றே கூறலாம். தற்போது முதன்முறையாக முத்தையா இயக்கும் கொடிவீரன் படத்தில் நடிகை ஹன்சிகா, சசிக்குமாரோடு ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.
முத்தையாவின் முந்தைய படங்களான குட்டிப்புலி, கொம்பன், மருது ஆகிய படங்களில் கதாநாயகிகளாக நடித்த லட்சுமி மேனன் மற்றும் ஸ்ரீ திவ்யா ஆகியோர் கிராமப்புறக் கதைகளுக்கு பொருந்தும் முக அமைப்பு உடையவர்கள். இந்நிலையில், கொடிவீரன் படமும் கிராமத்துப் பின்னணியில் உருவாகவுள்ள நிலையில், இதற்கு ஹன்சிகா பொருத்தமானவராக இருப்பாரா? படத்தில் அவருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,