/
தமிழகத்தில் சராசரிக்கு மேல் பருவமழை பொழிந்ததால் காய்கறி விளைச்சல் அதிகரித்து, சந்தையில் அவற்றின் விலை சரியத் தொடங்கியுள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரையில் தமிழகத்தில் சராசரிக்கு மேல் 48 சதவிகிதம் கூடுதலான அளவில் மழை பொழிந்துள்ளது. இதனால் காய்கறி விளைச்சல் அதிகரித்து, வழக்கத்தை விடக் கூடுதலான அளவில் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ளன. கடந்த வாரம் கிலோ ரூ.20க்கு விற்பனையான வெண்டைக்காய் தற்போது 7 ரூபாயாக விலை குறைந்துள்ளது. அதேபோல, 50 ரூபாய்க்கு விற்பனையான பீன்ஸ், 15 ரூபாயாகக் குறைந்துள்ளது. 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேரட் தற்போது 17 ரூபாயாகக் குறைந்துள்ளது.
விலை குறைந்துள்ள பிற காய்கறி வகைகளான பச்சை மிளகாய் 15 ரூபாய்க்கும், புடலங்காய் 10 ரூபாய்க்கும், தக்காளி 25 ரூபாய்க்கும், சாம்பார் வெங்காயம் 90 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 25 ரூபாய்க்கும், உருளைக் கிழங்கு 14 ரூபாய்க்கும், கீரை 18 ரூபாய்க்கும், பாகற்காய் 15 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 9 ரூபாய்க்கும், பீட்ரூட் 20 ரூபாய்க்கும் மற்றும் முருங்கைக்காய் 28 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.�,